சென்னை,
மூக்கையா தேவரின் நினைவு நாளையொட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
அகில இந்திய பார்வர்டு பிளாக் இயக்கத்தின் முக்கியத் தலைவர், தென் தமிழக மக்களின் உரிமைகளுக்காக உறுதியான குரலாக விளங்கிய “உறங்காப்புலி” பி. கே. மூக்கையா தேவர் அவர்களின் நினைவு நாள் இன்று.
அரசியலைத் தாண்டி, கல்வியே ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்பதை உணர்ந்து செயல்பட்டவர் மூக்கையா தேவர். குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய மக்களிடையே உயர்கல்வி வளர வேண்டும் என்ற நோக்கில் கள்ளர் கல்விக் கழகத்தை உருவாக்கியதோடு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் உசிலம்பட்டி, கமுதி, மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் கல்லூரிகள் உருவாக முக்கியப் பங்காற்றினார்.
இந்த நாளில் “உறங்காப்புலி” என்று போற்றப்பட்ட பி. கே. மூக்கையா தேவர் அவர்களின் பொதுவாழ்க்கை, மக்களுக்காகவும், கல்விக்காகவும், சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர் செய்த பணிகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.