சென்னை,
சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழவினருக்கு புகார் வந்தது.
விசாரணையில், சிறுமியிடம் அத்துமீறியது, காசிமேடு பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞர் தியாகு (வயது 32) என்பதும், தவெக ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட 50-வது வட்ட இணைசெயலாளர் என்பதும் தெரிய வந்தது. சிறுமியின் தாயுடன், 14 ஆண்டுகளாக தம்பி போல் பழகிய தியாகு, தனக்கு சிறுமியை திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.
மகள் திருமண வயதை எட்டியதும் திருமணம் செய்து தருவதாக தாய் கூறியுள்ளார். இதையடுத்து தியாகும் சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சிறுமிக்கு ஏற்கனவே மாடலிங் துறையில் ஆர்வம் இருந்ததால் புகைப்பட ஷூட்டிங்கிற்காக கடந்த ஆகஸ்டு 28-ம் தேதி சிறுமியை தியாகு புதுச்சேரிக்கு அழைத்து வந்தார். அங்கு அறை எடுத்து தங்கியபோது, சிறுமியிடம் தியாகு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது குறித்து ராயபுரம் மகளிர் போலீசார் கடந்த 29-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். ஜீரோ வழக்கு என்பது குற்றம் நடந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தான் புகார் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கலாம் அந்த வகையில் புதுச்சேரி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான தியாகுவை புதுச்சேரி போலீசார் தேடி வருகின்றனர்.