தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக ஷில்பா பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் துறை இயக்குநராக கிருஷ்ணனுன்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக ஷில்பா பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநராக அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.