தமிழக செய்திகள்

மேகதாது அணை பிரச்சனையில் வாய்திறக்க தவெக அரசு பயப்படுகிறது - திமுக சாடல்

விவசாயிகளுக்கான குறுவை தொகுப்பு, ஏமாற்று வேலை என திமுக தெரிவித்துள்ளது.

சென்னை,

மேகதாது அணை பிரச்சனையில் வாய்திறக்க தவெக அரசு பயப்படுவதாக திமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மாநில விவசாய அணிசெயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;

“ரீல்ஸ் மாடல்” ஆட்சியில் மேட்டூர் அணையை திறக்கவில்லை; மேகதாது விவகாரத்தை டெல்லியில் பேசவில்லை; ஒரு முனை மின்சாரத்துக்கே வழியில்லை - மும்முனை மின்சாரம் எப்படி சாத்தியம்? விவசாயக் கடன் தள்ளுபடி என்று ஏமாற்றியதைப் போல, குறுவை தொகுப்பும் ஏமாற்றும் திட்டம்தான்!

தமிழ்நாட்டில் விவசாய புரட்சியை ஏற்படுத்திய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஆண்டுதோறும் ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, விவசாயத்தை மேம்படுத்திய அந்த நடைமுறையை கூட இந்த நீர்மேலாண்மையிலும் அனுபவமில்லாத அரசு கடைபிடிக்கமுடியாமல் தோற்றுப்போயிருக்கும் நிலையிலும் , வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் அறிவித்த திராவிட மாடல் அரசின் பிதாமகர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேளாண்மை திட்டங்களை போல அல்லாமல், தற்போது வெற்று அறிவிப்பாக ரீலஸ் மாடல் அரசு வெளியீட்டிருக்கும் குறுவை தொகுப்பு மற்றும் மும்முனை மின்சார அறிவிப்பு என்பது அடுப்பை பற்றவைக்காமலேயே சமைப்பது போல உள்ளது என தி.மு. கழக விவசாய அணி கண்டனம் செய்கிறது.

தமிழ்நாட்டின் விவசாயப்புரட்சி என்பதும் விவசாயிகளின் பொற்காலம் என்பதும் திமுக ஆட்சிகாலம்தான் என்பது மறைக்க முடியாத உண்மை, முக்கியமாக குறிப்பிட வேண்டுமென்றால், இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு வழங்கியது; ஆட்சி வந்தவுடன் 7,000 கோடி ரூபாய் விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்தது.

தமிழ்நாட்டின் அனைத்து விவசாயம் சார்ந்த மாவட்டங்களிலும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு கூட்டங்கள், காவிரி மீட்பு பேரணி இப்படி பல விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திமுக செய்ததை தற்போதைய ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒவ்வொரு ஆண்டும் சரியாக ஜூன் 12 மேட்டூர் அணைதிறப்பு, சோழர்கள் ஆட்சிக்கு பின்னர் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரும் பணிகள், கடைமடை பகுதி வரையிலான நீர் பாசனம், வேளாண் மையங்களில் இடுபொருட்களும், விதை உரம் உள்ளிட்ட விவசாய உற்பத்தி பொருட்கள் போதுமான அளவு இருப்பு, அதிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், அங்கு பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கும் ஊதிய உயர்வு இப்படி இவைகளெல்லாம் வேளாண் வளர்ச்சியை நாட்டிலேயே உயர்ந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திக்காட்டியது திராவிட மடல் ஆட்சியின் பிதாமகர் அரசு.

தமிழ்நாட்டில் இந்த புரட்சிகளெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது குளிரூரட்டப்பட்ட கேரவனுக்குள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள், தற்போது விவசாயிகளுக்கு என்ன தேவை? என்பதை கூட அறியாமல் குறுவை தொகுப்பு திட்டத்தையும், மும்முனை மின்சாரத்தையும் அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் யாரோ எழுதிக்கொடுத்த விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதியை படித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்கு சேகரித்த அவர்கள் தற்போது , அதைக்கூட நிறைவேற்ற வக்கின்றி குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள்.

இப்படி விவசாயம் பற்றியும் ,விவசாயிகளின் பிரச்சனை குறித்த புரிதல் இன்றியும், டெல்டா விவசாயத்தின் உயிர்நாடி மேட்டூர் அணை திறப்பு குறித்த அக்கறை இன்றியும் குறுவை திட்ட சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறது ரீல்ஸ் மாடல் அரசு. கர்நாடகத்தில் மேகதாதுவில் அணை கட்ட எல்லா முயற்சியை எடுக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக , தனது ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்கிற பயத்தில் மேகதாது அணை பிரச்சனையில் வாய்திறக்கவே இந்த அரசு பயப்படுகிறது.

தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் இந்த ரீல்ஸ் மாடல் அரசு , மாநிலம் முழுவதும் தங்களது அனுபவமற்ற நிர்வாக திறனால் ஏற்பட்டிருக்கும் மின் தடையை போக்க நடவடிக்கை எடுக்காமல், அதை திசைதிருப்பி மடைமாற்றம் செய்திட காரணம் தேடிக்கொண்டிருக்கும் அமைச்சர்களை கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளுக்கான குறுவை தொகுத்திட்டம் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவாதாகவே அமைந்திருக்கிறது.

திட்டங்களை மட்டுமே அறிவித்து “ரீல்ஸ் போடுங்கள் ஆட்சி தொடர்ந்துவிடும்” என்கிற கொள்கைகளோடு ஆட்சி நடத்தும் தற்போதய ஆட்சியாளர்கள், குறுவை தொகுப்பு , மும்முனை மின்சாரம் போன்ற வெற்று அறிக்கைகளை வெளியிடும் முன் , அண்டை மாநிலமான கர்நாடகாவில் தனது ஆட்சி நடக்க தமிழ்நாட்டில் முட்டுக்கொடுக்கும் காங்கிரஸ் கட்சி ஆள்வதால், அவர்களிடம் இணக்கமாக பேசி காவிரி நீரை பெறவேண்டும் , மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து பேசவேண்டும், அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி வேளாண்மை கொள்கைகள் திட்டங்களை விவாதித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். விவசாய அமைப்பு பிரதிகளை அழைத்து பேசவேண்டும் .

எழுதிக்கொடுக்கும் அறிக்கைகளை ஏற்ற இறக்கத்தோடு பேசுவதற்கு முன்பு திமுக ஆட்சியின் சாதனைகளான ,

உபரி நிலத்தை மீட்டு விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்தது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நாட்டிலேயே முதன்முதலில் கொண்டுவந்தது, விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைத்தது, கரும்பு விலையை உயர்த்திக்கொடுத்தது, தமிழ்நாட்டில் உழவர் சந்தை அறிமுகம் செய்தது , கூட்டுறவு கடன் தள்ளுபடி அமலாக்கம் செய்தது, பயிர்க் கடன் வட்டி குறைப்பு, தமிழ் நாட்டில் உழவர் சந்திப்பு விரிவாக்கம் செய்தது, நெல் விவசாயிகளுக்கு சிறந்த ஊதியம் வழங்கியது, பயிர் காப்பீட்டு மானியங்கள் மற்றும் இழப்பீடு வழங்கியது , ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல், காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம், தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியார் இணைப்பு திட்டம், கரும்புச் சாலை மேம்பாட்டு முயற்சி, தென்னை விவசாயிகளுக்கான நல உதவி, உபரி நிலத்தை மீட்டு விவசாயிகளுக்கு மறுவிநியோகம் செய்தது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்தது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நாட்டிலேயே முதன்முதலில் கொண்டுவந்தது, விவசாய தொழிலாளர் நல வாரியம் அமைத்தது, கரும்பு விலையை உயர்ததீக்கொடுத்தது, தமிழ்நாட்டில் உழவர் சந்தை அறிமுகம் செய்தது, கூட்டுறவு கடன் தள்ளுபடி அமலாக்கம் செய்தது, பயிர்க் கடன் வட்டி குறைப்பு, தமிழகத்தில் உழவர் சந்திப்பு விரிவாக்கம் செய்தது, நெல் விவசாயிகளுக்கு சிறந்த ஊதியம் வழங்கியது, பயிர் காப்பீட்டு மானியங்கள் மற்றும் இழப்பீடு வழங்கியது, ஆதி திராவிடர் விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல், காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம், தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியார் இணைப்பு திட்டம், கரும்புச் சாலை மேம்பாட்டு முயற்சி, தென்னை விவசாயிகளுக்கான நல உதவி, விளிம்புநிலை விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல்.

இப்படி விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும், வேளாண் வளர்ச்சிக்கும் திமுகவின் அறிய திட்டங்களில் சிலவற்றையாவது கொஞ்சம் படித்துப் பார்க்க வேண்டும். செய்வார்களா?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.