தமிழக செய்திகள்

3 பேரும் த.வெ.க.வில் இணைந்தது குதிரை பேரம் இல்லை: அமைச்சர் ஆதவ் அர் ஜுனா பேட்டி

பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உறுப்பினர் அட்டையை பெற்றனர்.

சென்னை,

அ.தி.மு.க.வில் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த மரகதம் குமர வேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பின் தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர் ஜுனாவை சந்தித்தனர்.

மேலும் 3 பேரும் த.வெ.க.வில் இணைந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு உறுப்பினர் அட்டையை பெற்றனர்.

இந்த நிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பின் 3 பேரும் அமைச்சர் ஆதவ்அர்ஜுனாவை சந்தித்தது சர்ச்சையானது. இது தொடர் பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பனையூர் கட்சி அலுவலகத்தில் வைத்து விளக்கமளித்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் பதவியை ராஜினாமா செய்த பின் என்னை சந்தித்தார்கள். முதல்-அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். த.வெ.க.வின் கட்சி அலுவலகத்தில்தான் 3 பேரும் அதிகார பூர்வமாக கட்சியில் இணைந்தனர். தலைமைச்செயலகத்தில் ஒரு அமைச்சரை யார் வந்து வேண்டுமானாலும் சந்திக்கலாம்.

3 பேரும் இணைந்தது குதிரை பேரம் இல்லை. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.வில் இணைந்தது குதிரை பேரம் இல்லையா?. 3-ல் 2 பங்கு எம்.எல்.ஏ.க்களை உடைத்து கட்சியில் சேர்த்தால்தான் அது குதிரை பேரம். எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வுடன் கூட்டு வைத்து முதல்-அமைச்சராக திட்டமிட்டதை அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த தொண்டர்களிடம் வலியை கொடுத்தது. தமிழக வெற்றிக்கழகத்தை புதிய அ.தி.மு.க.வாக பார்ப்ப தாக அதனால் இணைகிறோம் என அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் எங்களி டம் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

நாங்கள் தூய்மையான ஆட்சி நடத்துகிறோம். அதனால் அன்புடனும், நம் பிக்கையுடனும் அ.தி.மு.க.வின் தொண்டர்களை நாங்கள் வரவேற்கிறோம். இடைத்தேர்தல்கள் வரும்போது நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறு வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.