திருச்சி,
தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று மாலை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விலைவாசி உயர்வு ஏழை மக்களை கடுமையாக பாதித்து இருக்கிறது. அரிசி ஒரு கிலோ ரூ.100 எட்டிவிட்டது. சக்கரை விலை ஒரு கிலோவுக்கு ரூ.25 உயர்ந்து இருக்கிறது. புளி விலை உயர்வு, பருப்பு விலை உயர்வு என மளிகை சாமான்கள் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்திருந்திருக்கிறது.
இதை கட்டுப்படுத்த இந்த தவெக அரசாங்கம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அதோடு அந்த துறையினுடைய அமைச்சரை நம்முடைய பத்திரிகையாளர்கள் நாடி கேட்கின்ற பொழுது அதற்கு உண்டான பதில் அவரிடத்தில் இல்லை. எங்கே விலை உயர்ந்திருக்கிறது என்று ஒரு கேள்வியை எழுப்புகின்றார். இது தவறானது. இந்த விலை உயர்வால் ஏழை-எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த விலை உயர்வை தடுப்பதற்கு, விலையை குறைப்பதற்கு இந்த தவெக அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
அதோடு டெல்டா மாவட்டங்களில் இருக்கின்ற விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் தண்ணீர் திறந்து விட்டார். 45 நாட்கள் தண்ணீர் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டு நேற்றையோடு 45 நாட்கள் முடிந்து இன்றைய தினம் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. இன்றைக்கு சம்பா சாகுபடி முழுமையாக எடுக்கப்பட வேண்டும் என்று சொன்னால் ஜனவரி மாதம் வரை தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இப்போது 45 நாட்கள் தான் தண்ணீர் திறக்கப்பட்டது.
இப்பொழுது தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. ஆகவே நடவு செய்ய முடியவில்லை. கடைமடை பகுதிக்கும் தண்ணீர் செல்லவில்லை. ஆக தண்ணீர் திறக்கப்பட்ட நோக்கம் சம்பா சாகுபடி செய்ய அதுவும் நிறைவேறவில்லை. இப்பொழுது நீர்மட்டம் 58 அடி தான் இருக்கின்றது. இது கிட்டத்தட்ட குடிநீருக்கே போதாது. 20 மாவட்ட மக்கள் காவேரி நதிநீரை நம்பி இருக்கிறார்கள்.
ஆக அவர் திட்டமிடாமல் தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக சம்பா சாகுபடிக்கும் டெல்டா மாவட்டத்தில் செயல்படுத்த முடியாமல் போய்விட்டது. எதிர்காலத்தில் அடுத்த மே, ஜூன் வரைக்கும் குடிதண்ணீர் தேவை. குடிதண்ணிற்கு தேவையான நீரும் அணையில் இல்லை.
ஆக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதுபடி கர்நாடக அரசை இந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் நாடி,. நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெறாத காரணத்தினால் இன்றைக்கு விவசாயிகள் பாதிக்கின்றார்கள்.
கேள்வி: இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. முதல்-அமைச்சர் விஜய் வெளி மாநிலம் செல்வதை முன்மாதிரியாக சொல்கிறார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: குடிநீர் பிரச்சினை எதிர்காலத்தில் ஏற்படும். தமிழ்நாட்டு மக்களை பற்றி அவருக்கு என்ன கவலை. இன்றைக்கு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. டெல்டா மாவட்டம் திருச்சியில் நான் வருகின்ற பொழுது பார்த்துக் கொண்டு தான் வந்தேன். தண்ணீர் தேங்கி இருக்கின்றது. திறக்கப்பட்ட தண்ணீர் இன்னொரு மூன்று நாட்களுக்குதான் வரும். பிறகு என்ன செய்ய போகிறார்கள். ஒரு கேள்விக்குறியாகி விட்டது.
திட்டமிட்டு செயல்படுகிற அரசாக இந்த தவெக அரசு இல்லை. இன்றைக்கு 45 நாட்கள் தண்ணீர் திறந்த பிறகு அதற்கு மேலும் கூடுதலான தண்ணீர் திறந்தால் தானே சம்பா சாகுபடி முழுவதும் எடுக்க முடியும். ஏற்கனவே குறுவை சாகுபடி டெல்டா மாவட்டத்தில் பாதித்து விட்டது. சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும். இதற்காக கர்நாடக அரசிடம் இருந்து நமக்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
அதோடு பாரத பிரதமர் இரண்டு நாட்களுக்கு முன் சென்னை வந்தார். அப்போதாவது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி கர்நாடக அரசு நமக்கு வழங்க வேண்டிய நீரை முழுமையாக பெறுவதற்கு பாரத பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை கூட வைக்கவில்லை. அப்புறம் எப்படி இவர்கள் விவசாயிகளை காப்பாற்றுவார்கள். மிகப்பெரிய பிரச்சினையை இந்த தவெக அரசு சந்திக்கும். இந்த அரசு குடிநீர் பிரச்சினையையும் சந்திக்கும். விவசாயிகளுடைய பிரச்சினையும் சந்திக்கும். திட்டமிடாமல் தண்ணீரை திறந்து விட்டதனால் தான்.
கேள்வி: அ.தி.மு.க பொதுக்குழுவை எப்பொழுது கூட்டப் போகிறீர்கள்?
பதில்: விரைவில். ஒவ்வொரு வருடமும் நாங்கள் கூட்டுவோம். அந்த காலகட்டம் வரும் போது கூட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.