தமிழக செய்திகள்

விலைவாசியை குறைக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தவெக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே செல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

“தீபாவளி பண்டிகை வரக்கூடிய நிலையில் அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தவெக ஆட்சியில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகம் மோசமான நிலையில் உள்ளது. விலைவாசியை குறைக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜிஎஸ்டி வசூல் குறைவு

ஜிஎஸ்டி வரி வருவாய் பல மாநிலங்களில் அதிகரித்த நிலையில் நமது மாநிலத்தில் 3% மட்டுமே பதிவாகி உள்ளது. திறமையற்ற அரசாங்கம் நடந்து வருவதால் தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் குறைந்து விட்டது. நிர்வாக திறமையின்மையால் வருவாய் இழப்பு, அரசு நலத்திட்டங்களும் கடுமையாக பாதிக்கும். 234 தொகுதிகளுக்கும் விஜய்தான் முதலமைச்சர். ஆனால் இடைத் தேர்தல் வரவுள்ள தொகுதிகளுக்கு மட்டும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT