சென்னை,
மாமன்னர் ராஜேந்திரன் சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”கடல் கடந்து கொடி நாட்டிய மாமன்னர்! கங்கை கொண்ட சோழபுரம் படைத்த பேரரசர், தமிழரின் வீரத்தையும் ஆட்சித்திறனையும் உலகறியச் செய்த மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் இன்று!
நீர்வளம், நிர்வாகம், கலை, கட்டிடக்கலை என அனைத்திலும் தொலைநோக்குப் பார்வையுடன் தடம் பதித்த மாமன்னர் ராஜேந்திர சோழன், வெறும் வரலாற்றின் மன்னர் அல்ல தமிழர் பெருமையின் அழியாத அடையாளம்! ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அவரது வீரமும் வெற்றியும் வரலாற்றுப் பக்கங்களில் கர்ஜிக்கிறது!”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.