சென்னை,
தமிழகத்தில் முந்தைய தி.மு.க ஆட்சியில் முடக்கப்பட்ட விஸ்வகர்மா திட்டத்தை, தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு உடனே அமல்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் பாரம்பரிய கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டமாகும். ஆனால், தமிழகத்தில் கடந்த தி.மு.க ஆட்சியில் இந்த விஸ்வகர்மா திட்டம் அமல்படுத்தப்படவில்லை. திட்டத்தை செயல்படுத்தாமல் தி.மு.க அரசு திட்டமிட்டு முடக்கி வைத்திருந்தது.
நாங்கள் ஆயிரக்கணக்கான விஸ்வகர்மா பயனாளிகளை பதிவு செய்து, அவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைய தயாராக வைத்திருந்தோம். ஆனாலும் கூட, அரசியல் காரணங்களுக்காக தி.மு.க அரசு இந்த திட்டத்தை மக்களுக்கு சென்றடைய விடாமல் தடுத்தது.
தற்போது தமிழகத்தில் புதியதாக வந்துள்ள தவெக அரசு, ஏழை எளிய கைவினைஞர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். முடங்கி கிடக்கும் இந்த விஸ்வகர்மா திட்டத்தை உடனடியாக தமிழகத்தில் அமல்படுத்தி, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று தவெக அரசுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.