தமிழக செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் -மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சேலம்,

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்குமென கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் முழுநீர்வரத்தும் வெளியேற்றப்படும். மேட்டூர் அணைக்கு இன்று மாலை நீர் வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கும், இன்று இரவு 12 மணிக்குள் நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியை தாண்டும் என மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்துவருவதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.