தமிழக செய்திகள்

விசில் சத்தம் விண்ணதிர கேட்கும்: தவெக வேட்பாளர் அருண்ராஜ்

திருச்செங்கோடு வேட்பாளராக அருண்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்

சென்னை,

தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்செங்கோடு வெற்றி வேட்பாளராக, தலைவர் என் பெயரை உச்சரித்து அறிவித்த உயிர்சிலிர்ப்பு தருணம்...

என் மீது நம்பிக்கை வைத்து, இந்த ஜனநாயக யுத்தத்தில் உங்கள் படை வீரனாக களம் காண வாய்ப்பளித்தமைக்கு நன்றி ...

வெவ்வேறு பெயர்களில் நாங்கள் தேர்தலில் நின்றாலும், எங்களது ஒரே வேட்பாளர் தலைவர் விஜய் மட்டுமே...

தலைவரின் உத்தரவாதம் தமிழ்நாட்டை மீட்கும்!
வெற்றி விசில் சத்தம் மே 4 விண்ணதிர கேட்கும்! என தெரிவித்துள்ளார்.