தமிழக செய்திகள்

தொழிலாளி தண்ணீரில் தவறி விழுந்து பலி

வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து இருந்த தொழிலாளி தண்ணீரில் தவறி விழுந்து பலியானார்.

வாய்க்காலில் விழுந்த தொழிலாளி

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 41). இவர் புகழூர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சவுமியா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.பிரகாசம் நேற்று முன் தினம் இரவு முத்தனூர் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது நிலை தடுமாறி பாலத்தில் இருந்து தண்ணீருக்குள் தவறி விழுந்தார்.

பிணமாக மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வாய்க்காலில் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு நள்ளிரவில் பிரகாசம் பிணமாக மீட்கப்பட்டார்.இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையிலான போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பிரகாசத்தின் மனைவி சவுமியா கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT