தமிழக செய்திகள்

அடங்காத ஆசை.. கள்ளக்காதலியின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்.. அடுத்து நடந்த சம்பவம்

மாணவியின் கண்முன்னே அவர்கள் 2 பேரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24), டிரைவர். இவருக்கும். திருமணமான 42 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பெண்ணுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் உள்ளார்.

மணிகண்டனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்ற மணிகண்டன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உல்லாசம் அனுபவித்து வந்தார்.

இதுதவிர மாணவியின் கண்முன்னே அவர்கள் 2 பேரும் தனிமையில் இருந்துள்ளனர். அடங்காத ஆசையால் மணிகண்டன் அடிக்கடி அந்த பெண்ணின் 14 வயது மகளிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்தார்.

தாய் கண் முன்னே மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதை மாணவியின் தாய் தட்டிக்கேட்கவில்லை.

இதுகுறித்து மாணவி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மாணவியின் தாய், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT