தமிழக செய்திகள்

கிராம சபை கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு

கிராம சபை கூட்டத்தில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்,

நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கோரிக்கைகளாக வைத்தனர்.

இந்நிலையில் கூட்டத்திற்கு ஏரியூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்ற இளைஞர் கலந்து கொள்ள வந்தார். கூட்டத்தில் அவர் தனது பகுதியில் குடியிருப்பு அருகே பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறினார். இது குறித்து பல்வேறு புகார்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

இவ்வாறு பேசி கொண்டு இருந்த அவர் திடீரெனதான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து டீசல் கேனை எடுத்தார். அதனை தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை கண்ட பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

SCROLL FOR NEXT