தமிழக செய்திகள்

தீரன் சின்னமலை பிறந்தநாள் - அண்ணாமலை வாழ்த்து

தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களுக்கு எதிராக, மூன்று போர்களில் மாபெரும் வெற்றி பெற்றவர்.

சென்னை,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வீரத்தின் உருவமாக, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இறுதிவரை போராடிய மாவீரன், தீரன் சின்னமலை அவர்களது பிறந்த தினம் இன்று.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக, மூன்று போர்களில் மாபெரும் வெற்றி பெற்றவர். அளப்பரிய ஆலய திருப்பணிகள் மேற்கொண்டவர்.

தேச விடுதலைக்காக, தம் இன்னுயிரையே தியாகம் செய்த தீரன் சின்னமலை அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT