தமிழக செய்திகள்

தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி; டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்

சிறைத்துறை டிஜிபியாக சங்கர் நியமனம் செய்து உள்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சிறைத் துறை டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேனியில் 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் காவல் துறையைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து உள் துறை முதன்மைச் செயலாளர் அ. கார்த்திக் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சிறைத்துறை தலைவராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக கூடுதல் டி.ஜி.பி கே. சங்கர், சிறை மற்றும் சீர்திருத்தச் பணிகள் துறையின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

மேலும், சஞ்சய் மாதுர் மாநில குற்றப் பதிவுப் பணியகத்தின் டி.ஜி.பி-யாகவும், சோனல் சந்திரா சென்னை டி.ஜி.பி அலுவலக தலைமையக ஐ.ஜி-யாகவும்,

பி. ரகுபதி கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும் (SP), டாக்டர் ஆர். ஸ்டாலின் தென்காசி மாவட்ட எஸ்.பி-யாகவும், எஸ். அசோக் குமார் மதுரை பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti-Terrorism Squad) எஸ்.பி-யாகவும் நியமிக்கப்பட்டு புதிய பணியிட மாற்றங்களைப் பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT