சென்னை,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூனில் நவம்பர் 24 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்வே தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலதுசாரி சங்பரிவார் அமைப்புகளின் தவறான கோருதலை ஏற்கும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும், அதுவும் ஒரே ஒருநாள் மட்டும் தீபம் ஏற்றலாம் என்பது, அங்கு சில நூற்றாண்டுகளாக நடைமுறை வழக்கமாகவும், பாரம்பரியமுறையாகவும், சமூக நல்லிணக்கத்துடன் நடந்து வரும் தீபத் திருவிழா முறையை முறிப்பதும், புதிய முறையை அறிமுகப்படுத்துவதும் சமூக நல்லிணக்கத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்பதை சுப்ரீம்கோர்ட்டில் கருத்தில் கொள்ளாதது வியப்பளிக்கிறது.
சட்டத்தின் அடிப்படையிலும் உரிய வரவாற்று ஆகாரங்கள் மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் நீர்ப்பு வழங் வேண்டிய நீதிமன்றம், நம்பிக்கையின் அடிப்படையில் இத்தகைய ஓர் இடைக்கால தீர்ப்பு வழங்கியிருப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறான மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும்.
எனவே உடனடியாக இந்த உத்தரவை சுப்ரீம்கோர்ட்டு மறுபரிசிலனை செய்து, ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு, சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை சீராய்வு செய்யும் புதிய மனுத்தாக்கல் செய்து, இடைக்கால உத்தரசை செயலிழக்க செய்ய வேண்டியது உடனடி தேவையாகும்.
திருப்பரங்குன்றத்தில் வழிவழியாக பாதுகாத்து வரும் மதநல்லிணக்கத்தை உறுதி செய்திட அனைத்து பிரிவு மக்களும் ஒன்றுபட்டு நல்லிணக்கம், மற்றும் அமைதியை பாதுகாக்க முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.