மதுரை,
5 ஆண்டுகளுக்கு எவ்விந்த இடையூறு இல்லாமலும் தவெக ஆட்சி தொடரும் என திருமாவளவன் கூறினார்.
விசிக தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அவர் பேசிய விவரம் பின்வருமாறு;
* எங்களை பொறுத்தவரை தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை. 5 ஆண்டுகளுக்கு எவ்வித இடையூறு இல்லாமலும் தவெக ஆட்சி தொடரும். தவெக ஆட்சி தொடர விசிக துணை நிற்கும். தவெகவுக்கு அளித்த வாக்குறுதியை கட்டாயம் காப்பாற்றுவோம். தவெக ஆட்சிக்கு கொடுத்த ஆதரவு எப்போதும் தவறாது.
* நாளை தவெக நடத்தும் கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்போம். கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பார்கள். விசிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தவெக கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
* அதிமுகவில் தொடர் பதவி விலகல், அக்கட்சியில் நிகழும் உட்கட்சி முரணை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. இது அதிமுகவில் தற்போது பெரிய பிரச்சினையாக உள்ளது. அதிமுகவில் என்ன பிரச்சினை என்பதை பதவி விலகுவோரிடம்தான் கேட்க வேண்டும். அவர்கள்தான் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.