தமிழக செய்திகள்

‘தமிழ்நாட்டில் மருந்து பற்றாக்குறை இல்லை’ - அமைச்சர் அருண்ராஜ்

செவிலியர் பற்றாக்குறை இனி இருக்காது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

செவிலியர் பற்றாக்குறை இருக்காது

“மாநிலம் முழுவதும் காலியாக இருந்த 4 ஆயிரத்து 724 செவிலியர் பணியிடங்கள் அந்தந்த மாவட்ட நலச்சங்கங்கள் மூலமாக வெளிப்படையான முறையில் நிரப்பப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே செவிலியர் பற்றாக்குறை இனி இருக்காது. மேலும், உயர் சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்க புதிதாக 284 உயர் சிறப்பு மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றுக்கான நியமன அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

சிறு குறைகள்

தமிழ்நாட்டில் பெரிய அளவில் மருந்து பற்றாக்குறை இல்லை. த.வெ.க. ஆட்சிக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது, அவர் இயலாமையில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக அவர் இப்படி சொல்கிறார்.

ஊழலற்ற, நேர்மையான, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு முதல்-அமைச்சர் விஜய் ஆட்சி நடத்தி வருகிறார். ஆங்காங்கே சிறு குறைகள் இருக்கத்தான் செய்கிறது. அவை சரி செய்யப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT