சென்னை,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளநிலையில், கலைஞரின் சொற்களை நெஞ்சில் ஏந்தி, கொள்கை பாதையில் தொடர்ந்து முன்னேறிச செல்வோம் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் கூறியதாவது:-
தமிழினத்தின் உரிமைக் குரலாக உதித்த திராவிட முன்னேற்றக் கழகம், கண்டிராத வெற்றியும் இல்லை; சந்தித்திராத தோல்வியும் இல்லை.
“ஆட்சி வரும், போகும்; அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக!” என்ற தலைவர் கலைஞரின் சொற்களை நெஞ்சில் ஏந்தி, கொள்கைப் பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்வோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.