திருப்பரங்குன்றம் த வெக வேட்பாளர் சி டி ஆர் நிர்மல் குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் திருச்சி கிழக்குத் தொகுதி வேட்புமனுத் தாக்கல் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்று முடிந்தது. திருச்சி முழுவதும் திரண்டு இருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாகம், தமிழகம் முழுவதும் ஒரு பெரிய மாற்றத்திற்கான அலை வீசுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.குறிப்பாக, செல்லும் இடமெல்லாம் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் 'விசில்' சின்னத்திற்கே வாக்களிக்கத் தயாராக இருப்பதாகவும், தேர்தல் முடிவுகள் இதனை எதிரொலிக்கும்.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்திருத்தத்திற்கு (FCRA) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். இந்தச் சட்டம் ஒருதலைப்பட்சமாக சிறுபான்மை மக்களைப் பாதிக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக கோடிக்கணக்கான ஏழை மாணவர்களுக்குக் கல்வி வழங்கி வரும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களை முடக்கும் செயலாக இது உள்ளது, தேர்தல் முடிந்த பிறகு இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான எந்த ஒரு செயலையும் தவெக அனுமதிக்காது.
தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் சென்னையில் தலைவரின் பிரச்சாரத்தின் போது காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை , ஆனால் திருச்சியில் காவல்துறையின் செயல்பாடுகள் ஓரளவுக்குத் திருப்திகரமாக இருந்தது.வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு அரண்களை அமைப்பதில் அரசு இயந்திரம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் வரும் மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும் அப்போது கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைதியாக இருந்த திருப்பரங்குன்றத்தில் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்து, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் திமுகவும் பாஜகவும் அரசியல் செய்கிறது.தேர்தல் பரப்புரையின் போது ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேண்டுமென்றே இடையூறு செய்ய அனுப்பப்படுகிறது, இது போன்ற செயல்களைக் காவல்துறை முறையாகக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்தெரிவித்தார்