திமுக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருப்பது நகைச்சுவைச் செய்தியில் தான் வர வேண்டும். அவர்களே பாம் வைப்பார்களாம். அப்புறம் அவர்களே போய் எடுப்பார்களாம். இதெல்லாம் நசைச்சுவை செய்தியில் தான் எடுத்து கொள்ள வேண்டும். முன்னாள் அமைச்சர் மீது அவர்களுக்கு என்ன கோபமோ என்று ராஜ்மோகன் கூறியுள்ளார்.
கோவை காந்திபுரத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களை கொண்ட பிரமாண்ட நூலகம் கட்டப்பட்டது. கடந்த 2024-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் இந்த நூலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் நூலகத்தை கடந்த மாதம் 16-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் புத்தகங்கள் வாங்க ரூ.50 கோடியும், இ-புத்தகங்கள் வாங்க ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பெரியார் நூலகத்தில் இடம் பெற்றிருந்த புத்தகங்கள் போலி பதிப்பகங்கள் மூலம் வாங்கப்பட்டு உள்ளதாகவும், செயற்கை நுண்ணறிவு பயன் படுத்தி புத்தகங்களின் முகப்புரைகள் எழுதப்பட்டு உள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.மேலும் புத்தகங்களின் எழுத்தாளர்கள் பெயர்களும் சர்ச்சைக்குரிய வகையில் இருந்தன. இதுகுறித்த குற்றச்சாட்டுகளை எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுப்பியதுடன், அரசு இந்த புத்தகங்கள் குறித்தும், பதிப்பகங்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து பெரியார் நூலக புத்தக கொள்முதல் விவகாரம் பெரும் புயலை கிளப்பியது.
அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் பெரியார் நூலகத்திற்கு புத்தகம் வாங்கியதில் நடந்த ஊழலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இதுதொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். எனினும்,திமுக இந்த குற்றசாட்டை மறுத்து வருகிறது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையிடமும் திமுக புகாரளித்துள்ளது. இது குறித்து அமைச்சர் ராஜ்மோகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராஜ்மோகன் கூறியதாவது;
கொள்முதல் ஆர்டரை மாற்ற முடியுமா? கருவூலத்திலிருந்து மாவட்ட நிர்வாகத்திற்குச் சென்ற ரிலீஸ் ஆர்டரை மாற்ற முடியுமா? ஆர்டரை மாற்றுவது வேறு, ஆய்வு செய்வது வேறு. எடப்பாடி பழனிசாமி அரசியல் காரணத்திற்காகச் சொல்கிறார். கள்ளநோட்டு அடிப்பது போல, ஏஐ-ஐ பயன்படுத்தி உண்மையான புத்தகத்தில் இருந்து கருத்துகளைத் திருடி புத்தகத்தை அச்சிட்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அறிவுத் திருட்டு. திமுகவும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருப்பது நகைச்சுவைச் செய்தியில் தான் வர வேண்டும். அவர்களே பாம் வைப்பார்களாம். அப்புறம் அவர்களே போய் எடுப்பார்களாம். முன்னாள் அமைச்சர் மீது அவர்களுக்கு என்ன கோபமோ தெரியவில்லை”என்றார்.