தமிழக செய்திகள்

குற்றம் செய்வதவர்களுக்கு தண்டனை பெற்று தரப்படும் - அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

நிலக்கரி கொள்முதலில் கொள்கை அடிப்படையில் மாற்ற வேண்டியிருக்கிறது. தவறு நடந்ததை அனைத்தையும் மாற்றி வருகிறோம்.

சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மின்சார வாரியத்தில் திருடப்பட்ட ஹாட்டிஸ்குகள் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அங்கு சென்று தீவிர விசாரணை நடந்து வருகிறது. திருட்டு போன ஹார்டிஸ்க்குகள் எவை, எவை என்று கணக்கிடப்பட்டு வருகிறது. குற்றம் செய்வதவர்களுக்கு தண்டனை பெற்று தரப்படும். எதையும் மறைக்க முடியாது. வேறு எங்கெல்லாம் முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்தும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் தான் இதுபோன்ற நடந்துள்ளது. அனைத்து தளத்திலும் சேர்த்து 18 ஹாட்டிஸ்குகள் திருடப்பட்டு உள்ளது. உள்ளே இருப்பவர்கள் செய்திருக்கலாம். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த துறையில் செந்தில்பாலாஜி வந்த பிறகு இந்த துறை எப்படி போனது என்று அனைவருக்கும் தெரியும். அவருடைய பேட்டியில் ஒப்பந்தப்புள்ளியை வாரியம் தான் அனுமதி அளித்தது என்கிறார். அப்படியானால் சி.பி.ஐ. விசாரணை எதற்கு வந்தது. ரூ.8 லட்சம் மதிப்புள்ள டிரான்ஸ்பார்மர்களை ரூ.13 லட்சம் என்று போட்டது ஏன்? நீதிமன்றம் கேட்டுள்ளது. இதற்காக தான் சி.பி.ஐ. விசாரணை வந்துள்ளது. அடித்தளத்திலேயே பிரச்சினை உள்ளது.கொள்கை அளவில் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. சூரிய சக்தி திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லை. 1 மெகாவாட்டுக்கு புரோக்கருக்கு ரூ.30 லட்சம் வரை செலுத்த வேண்டியிருந்தது. சூரிய சக்தியை திட்டத்தை விரைவில் வெளிப்படை தன்மை கொண்டு வரப்படும்.

நிலக்கரி கொள்முதலில் கொள்கை அடிப்படையில் மாற்ற வேண்டியிருக்கிறது. தவறு நடந்ததை அனைத்தையும் மாற்றி வருகிறோம். சீரமைக்கப்பட்ட பணிகள் அறிவிப்பாக வெளியிடுவோம். மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்க கூடாது என்று வலியுறுத்தி உள்ளோம். கர்நாடக முதல்-மந்திரி அரசியல் காரணத்திற்காக பேசி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.