தமிழக செய்திகள்

வந்தார்கள்.. கேட்டார்கள்.. கிடைக்கவில்லை.. இது இன்றைய செய்தி: நாளைய செய்தி..? - தமிழிசை சவுந்தரராஜன் பதிவு

தமிழகத்திற்கு அதிக இடங்கள் கிடைக்கப் போகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மகளிர்க்கு அதிக அங்கீகாரம் கிடைக்கப் போகிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

வந்தார்கள்... கேட்டார்கள்... கேட்டது கிடைக்கவில்லை.. சென்றார்கள்... இது இன்றைய செய்தி...

மசோதா கொண்டு வந்தார்கள்.. கேட்டார்கள்.. கேட்டது கிடைத்தது.. வென்றார்கள்.. இது நாளைய செய்தி..

கிடைக்கப் போகிறது தமிழகத்திற்கு அதிக இடங்கள்..

கிடைக்கப் போகிறது மகளிர்க்கு அதிக அங்கீகாரம்..

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT