திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகின்றன.
கோவில் வளாகத்தில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. உண்டியல் வருமானமாக பக்தர்கள் செலுத்தியிருந்த ரூ.4 கோடியே 84 லட்சத்து 34 ஆயிரத்து 795 ரொக்கப்பணம் கிடைத்தது. அதேபோல் 1 கிலோ 62 கிராம் தங்கமும், 26 கிலோ 267 கிராம் வெள்ளி யும், 963 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.