தமிழக செய்திகள்

திருக்கார்த்திகை தீபத்திருவிழா: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு இந்த ஆண்டு 50 முதல் 60 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஆதவ் தெரிவித்தார்.

சென்னை,

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் இணைந்து நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் - திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்' திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு இந்த ஆண்டு 50 முதல் 60 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை ஆறு மணியிலிருந்து மாலை நான்கு மணிவரை மேற்கொண்ட நேரடி கள ஆய்வுகள் குறித்தும், அனைத்து பக்தர்களும் சிறப்பாக விழாவில் பங்கேற்று திரும்பும் வகையில் ஒவ்வொரு துறைசார்ந்த அலுவலர்களுக்கும் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்திட்டங்கள் பற்றியும் கலந்தாலோசித்தோம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT