தமிழக செய்திகள்

சட்டம் ஒழுங்கில் தவெக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் - திருமாவளவன்

திரைத்துறையில் இருந்து நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதை புதிய வரவு என பார்க்க முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார்.

அரியலூர்,

அரியலூரில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சட்டம்-ஒழுங்கில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலை விரைந்து தடுக்க வேண்டும்; செஞ்சி சிறுமி கண்டுபிடிக்கப்படுவார் என நம்புகிறேன்.

கருத்து சொல்ல ஏதுமில்லை

தனுஷ் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது என்பது ஊடகங்களின் யூகங்களாக தான் உள்ளது. அதனை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனவே அதன் மீது கருத்து சொல்ல இப்போதைக்கு ஏதுமில்லை.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாடு அரசியலில் புதிதல்ல. நடிகர் விஜய் தான் முதன் முதலில் இதை தொடங்கி வைத்தார் என சொல்ல முடியாது. திரைப்பட கலைஞர்களுக்கு அல்லது கலை உலக தொடர்பு என்பது அரசியலில் தீவிரமாக உள்ளது. எனவே திரைத்துறையில் இருந்து நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதை புதிய வரவு என பார்க்க முடியாது என்றார்.

SCROLL FOR NEXT