சென்னை,
கட்சி அலுவலகத்தை தொடங்கி வைத்த பின் அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவாத சக்திகளின் கோரிக்கைகளை அரசு புறந்தள்ள வேண்டும். ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றும் நடைமுறையை தொடருவதற்கான சட்ட போராட்டத்தை நடத்த வேண்டும். மதவாத சக்திகளுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விசிக உறுதுணையாக இருக்கும் என்றார்.
அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் பாழடைந்து இருந்த திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், தேர்தலில் நாம் அளித்த வாக்குறுதியின்படி புதுப்பிக்கப்பட்டு, நேற்று முன்தினம் தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இன்று காலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தேன். அவர்கள் வழங்கிய மனுக்களின் மீது அந்தந்த துறையிரீதியான அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.