திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், தங்களிடம் ஆலோசிக்காமல் தங்களது பெயர்களையும் சேர்த்து கோவில் துணை ஆணையர் அறிக்கை வெளியிட்டது மனவேதனையை தருவதாக ஸ்தானீக பட்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
அருள்மிகு ஆண்டவர் சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில் நிர்வாக அதிகாரி / துணை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழுதலைவர் மற்றும் அறங்காவலர்கள் அவர்களுக்கு,
இத்திருக்கோவில் ஸ்தானீக பட்டர்கள் எழுதிக் கொண்டது. இப்பவும் இன்று நடந்து முடிந்த 2026 திருக்கார்த்திகை தீபத்தன்று அனைத்து ஊடகங்களின் வாயிலாக ஓர் கடிதத்தை நமது திருக்கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி வெளியிடப்பட்டது என்பதை அறிந்தோம்.
நாங்கள் இத்திருக்கோவிலில் இன்று நடந்த கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கடிதமும் திருக்கோவிலுக்கு வழங்கவில்லை மற்றும் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக கடந்த ஆண்டு தபால் தத்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக நாங்கள் எந்த ஒரு கருத்தும் கூறவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தாங்கள் ஊடகங்களுக்கு வெளியிட்ட கடிதத்தில் எங்களை கலக்காமல் எங்களது பெயர்களையும் சேர்த்து வெளியிட்டது எங்களுக்கு மிகவும் மனவேதனையை தருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.