மதுரை
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் 24-ந்தேதி (அதாவது இன்று) தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 20-ந்தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக திருப்பரங்குன்றம் பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது. நேற்று இரவு மதுரை மாவட்டத்தில் 144 தடை விதிப்பதாக கலெக்டர் உத்தரவிட்டு இருக்கிறார். இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகளை விசாரிக்கும் நிர்வாக நீதிபதி வேல்முருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறையில் செல்கிறார்.
எனவே 2-வது பெஞ்ச் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், சுமதி ஆகியோர் முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு பட் டியலிடப்பட்டு உள்ள பொதுநல வழக்குகள் உள்ளிட்டவைகளை விசாரிக்கின்றனர். எனவே முதல் டிவிஷன் பெஞ்ச் நீதி பதிகளான மேற்கண்ட இருவரிடமும் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் சம்பந்தமான கோரிக்கைகளை விசாரிக்கும்படி வக்கீல்கள் முறையிடலாம் என கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 10.30 மணி அளவில் நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்க தொடங்கும்போது, வக்கீல்கள், பொதுமக்கள் தங்களது கோரிக் கைகளை நீதிபதிகள் முன்பு தெரிவிக்க அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.