மு.வீரபாண்டியன் 
தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மறுசீராய்வு செய்ய தமிழ்நாடு அரசு மனு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பாரம்பரியமாக ,நீண்டகாலமாக கடைபிடிக்கப்படும் தீபம் ஏற்றும் நடைமுறையை பாதுகாக்க வேண்டும்.

சென்னை,

திருப்பரங்குன்றம் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட்டின் அறிவியல்பூர்வமற்ற இடைக்கால உத்தரவை மறுசீராய்வு செய்ய தமிழ்நாடு அரசு மனுதாக்கல் செய்துள்ளது வரவேற்பிற்குரியது என்று மு.வீரபாண்டியன் தெரிவித்தார். இது குறித்து,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கார்த்திகை தீபம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்வே தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் இச்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

சர்வே தூண்

சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பாரம்பரியமாக ,நீண்டகாலமாக கடைபிடிக்கப்படும் தீபம் ஏற்றும் நடைமுறையை பாதுகாக்க வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி காலத்து சர்வே தூணில் , தீபம் ஏற்ற வேண்டும் என அரசியல் நோக்கோடுபிரச்சினையை கிளப்பி, மதரீதியில் மக்களை பிளவுபடுத்த முயலும் வகுப்புவாத சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்திட வேண்டும்.

மதநல்லிணக்கம்

மதநல்லிணக்கத்தையும்,மதச்சார்பின்மையையும்,மக்கள் ஒற்றுமையையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ,தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT