வானதி சீனிவாசன் 
தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்: கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - வானதி சீனிவாசன்

பக்தர்களின் நம்பிக்கைக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதுதான் ஒரு மக்கள் நல அரசின் கடமை என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார். இது குறித்து, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கண்டனம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ள நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு அவசரமாக சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எதிராக செயல்படுவது ஏன்?

இந்து மக்களின் வழிபாட்டு உரிமைகளையும், நீண்டகாலமாக அவர்கள் வலியுறுத்தி வரும் ஆன்மிக உணர்வுகளையும் மதித்து நடக்க வேண்டிய அரசு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக செயல்படுவது ஏன்? திமுகவின் பாணியை அப்படியே பின்பற்றும் தவெக இந்து விரோத போக்கை கடைப்பிடிப்பது கண்மூடித்தனமான செயல்.

அரசின் கடமை

பக்தர்களின் நம்பிக்கைக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதுதான் ஒரு மக்கள் நல அரசின் கடமை. வாக்கு வங்கி அரசியலுக்காக இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளைப் புறக்கணிப்பதை தமிழக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதித்து, கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT