சென்னை,
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாளன்று (வரும் 24ம் தேதி) தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கோவில் நிர்வாகம், அரசு அதிகாரிகள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே மலைக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும் தீபம் ஏற்ற பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
தீபத்தூணில் தீபம் ஏற்ற போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு, தேவைப்பட்டால் மத்திய தொழிற்பாதுகாப்புப்படையினரையும் பாதுகாப்புக்கு பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு காங்கிரஸ் கமிட்டி முழு ஆதரவு அளிக்கும் என்று தமிழக காங். கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அரசு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசின் முடிவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முழு ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.