சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்றும் நீதிமன்ற உத்தரவைத் திமுக அரசு அவமதித்த வழக்கில், நீதிமன்றம் குறிப்பிடும் ஐந்து நபர்களைத் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற மார்ச் 4-ஆம் தேதி மாலை 4-க்குள் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி கூறியுள்ளார்.
இதற்குப் பிறகாவது, தனது தவறை உணர்ந்து திருந்தி, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற திமுக அரசு அனுமதிக்கும் என்று நம்புகிறேன். வழக்கம் போல தனது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வாய்ப்பையும் தவறவிட்டு, இந்துக்கள் உரிமையை முடக்கத் திட்டமிட்டால், நீதிமன்ற இறுதி தீர்ப்பின் போது ஒட்டுமொத்தமாக முடங்கப்போவது திமுக அரசு மட்டுமே!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.