தமிழக செய்திகள்

திருவள்ளூர்: ஆலையில் அமோனியா வாயுக்கசிவு; 45 பேர் மயக்கம்

அவர்களில் சிலருக்கு வாய், மூக்கிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

திருவள்ளூர்

திருவள்ளூரில் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதில் 45 பேர் மயக்கம் அடைந்தனர்.

அமோனியா வாயுக்கசிவு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில், தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் வேலையில் இருந்தபோது, திடீரென அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டு உள்ளது. அதனை சுவாசித்த பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.

இதனால், 45-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலருக்கு வாய், மூக்கிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT