தமிழக செய்திகள்

திருவள்ளூர்: ஏரியில் சட்டவிரோதமாக ரசாயன கழிவு வெளியேற்றம் - பொதுமக்கள் புகார்

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பல்வேறு நீர்நிலைகளில் சட்டவிரோதமாக கொட்டப்படுகின்றன.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் டேங்கர் லாரி மூலம் ஏரி பகுதியில் சட்டவிரோதமாக ரசாயன கழிவு வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் 400-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பல்வேறு நீர்நிலைகளில் சட்டவிரோதமாக கொட்டப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.