தமிழக செய்திகள்

திருவாரூர்: வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து - 7 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

திருவாரூர் மாவட்டத்தின் கொரடாச்சேரியில் உள்ள வடகண்டம் கிராமத்தை சேர்ந்த செல்வம் இவருடைய மனைவி சித்ரா. அவர்களுடைய குடும்பத்தை சேர்ந்த 6 வயது குழந்தை பூர்ணகலா, அபிநயா, புலிப்பாண்டி, சிவபிரதாப் மற்றும் திவ்யா. இவர்கள் குடும்பமாக திருக்கடையூர் கோவிலுக்கு சென்றிருந்தனர். அங்கு சாமி தரிசனம் முடித்து, அவர்கள் தங்களது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அந்த வாகனத்தை ஓட்டுநர் புலிப்பாண்டி ஓட்டி வந்ததாக தெரிகிறது.எட்டியலூர் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களின் அலரல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் 108 ஆம்புல்ன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது.ஏழு பேரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கே அவசர சிகிச்சை பிரிவில் ஏழு பேரும் அனுமதிக்கபட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இரண்டு பேர் உயிரருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த ஏழு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக குடவாசல் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய போது இந்த விபத்து அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.