சென்னை,
மதசார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக செங்கொடி இயக்கத்தின் தோழர் வேட்பாளர் சுந்தர்ராஜன் அவர்கள் திருவொற்றியூர் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு உங்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்.
தோழர் பற்றி எனக்கு நன்றாக தெரியும். சமூக நலம் சார்ந்த அத்தனை போரட்டங்களிலும் முன் நிற்பவர் குறிப்பாக துப்பரவு தொழிலாளர்களுக்காக கடுமையாக போராடியவர். எங்கு சென்றாலும் கூட்டணி சார்பாக வெற்றி பெற்றாலும் சட்டமன்றத்திலும் சரி, மக்கள் மன்றத்திலும் சரி நீதிக்காக உரக்க குரல் கொடுப்பவர்.
அவரை நினைக்கும் போது மக்கள் திலகம் எம்.ஜிஆர் பாடியது தான் நினைவுக்கு வருகிறது தோழர் ஏன் ஜெயிப்பார் என்றால் நல்லவன் லட்சியம் வெல்வது நிச்சயம் இது வந்து வாத்தியார் பாடிய பாடல் அது மட்டும் இல்ல முக்கியமான இன்னொரு வரி இருக்கிறது.
அதுக்கு இந்த தோழரின் வெற்றி முக்கியம் வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவது எல்லாம் சட்டம் ஆகணும் தம்பி சமத்துவம் வந்தாகணும் அதுவே மகத்துவம் ஆகணும் நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் - நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும் என்று ஒரு பாட்டு இருக்கு.
இந்த பாடல் வரிகள் எல்லாமே தோழர் சுந்தர்ராஜனுக்கு பொருந்தும் இவரை சட்டமன்றத்துக்கு அனுப்புவது திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு பலன் உள்ளதாக இருக்கும் என்பதன் அடிப்படையில் இந்த பதிவை வெளியிடுகிறேன்.
நன்றி வணக்கம் வெற்றி வேட்பாளராக எல் சுந்தர்ராஜன் அவர்களை கொண்டு வர வேண்டியது உங்கள் பொறுப்பு திருவொற்றியூர் மக்கள் நலனுக்காக நான் இதை மீண்டும் கூறுகிறேன் என சத்தியராஜ் தெரிவித்தார்.