தமிழக செய்திகள்

இந்த நாடே என் வீடு: கார்த்தி சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு சீமான் அதிரடி பதில்

நான் தனித்து தன்மனத்தோடு மக்கள் மீது நம்பிக்கை வைத்து போட்டியிடுகிறேன் என சீமான் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தற்போது தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் காரைக்குடியில் பிரசாரம் செய்திருந்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சீமானுக்கு இங்கு ஓட்டு கிடையாது. சீமானுக்கு இங்கு சொந்த வீடு கிடையாது. என்ற விமர்சனத்திற்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பதில் கூறியதாவது:-

இந்த விமர்சனம் தொடர்பாக நான் பேச தொடங்கினால் நீண்ட நேரமாகும் இதற்கு என் தம்பி தங்கைகள், கார்த்தி சிதம்பரத்திற்கு பதில் கொடுப்பார்கள் என்று கூறினார். அவருடைய அப்பா சிதம்பரம் பேசட்டும் அப்போது நான் பேசுகிறேன். கார்த்தி சிதம்பரம் பேசுவது சிறுபிள்ளைத்தனமானது மேலும் மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார், அங்கே வீடு மற்றும் ஓட்டு இருந்ததா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ராகுல் காந்தியின் தங்கை பிரியாங்கா காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிட்டார், அவருக்கு அங்கே வீடு மற்றும் ஓட்டு இருந்ததா எனவும் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளாருக்கு அங்கே ஓட்டு இருக்கிறதா, அந்த வேட்பாளர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்று கூறினார். சிதம்பரம் வட மாநிலத்தின் பிரதிநிதியாக மந்திரி ஆனார் அவருக்கு அங்கே வீடு உள்ளாத, மேலும் தேசியப்பற்று மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் பேசுவது நீங்கள் தானே எனவும் கேள்வி எழுப்பினார்.

இதுவரை நாய், நரியை தான் தேர்தலில் பார்த்து இருப்பீர்கள் ஆனால் நான் புலி என்றும் அந்த பயம் இருக்கட்டும் என தெரிவித்தார். காரைக்குடியில் வந்து தான வைக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கட்டும். காரைக்குடியில் தான் எனக்கு வீடு இல்லை ஆனால் இந்த நாடே என் வீடுதான் ஒட்டு மொத்த தமிழ் தேசியத்தின் செல்ல பிள்ளை எனவும் கூறினார்.

நானும் கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்கி்றோம் அங்கு தெரியும் யார் செல்ல பிள்ளை மற்றும் செல்வ பிள்ளை என்று தெரியும். நான் இந்த தேர்தலில் வெல்வேன் இல்லை வீழ்கிறேன். ஆனால் நான் தனித்து தன்மனத்தோடு மக்கள் மீது நம்பிக்கை வைத்து போட்டியிடுகிறேன் அந்த துணிவு தமிழகத்தில் எந்த கட்சிக்கு இருக்கிறது. ஆளும்கட்சியே 22 கட்சிகளுடன் கூட்டணியில் போட்டியிடுகிறது. அதில் காங்கிரசும் ஒரு கட்சி என தெரிவித்தார்.