இ.பரந்தாமன் 
தமிழக செய்திகள்

தமிழகத்தில் காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடியது இதுவே முதல்முறை - திமுக குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் யாராவது சட்டமன்றத்தில ஒழுங்கா பதில் சொன்னாங்களா? என்று பரந்தாமன் தெரிவித்தார்.

சென்னை,

காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிப்பது இதுவே முதல்முறை தவெக ஆட்சி அமைந்த பிறகு 50 கைதிகள் தப்பி சென்றுள்ளனர். கைதிகள் தப்பியது, சட்டம் ஒழுங்கு கெட்டு கிடப்பது தொடர்பாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:-

முதல்-அமைச்சராக ஜீரோ

மக்களுக்கும் பாதுகாப்பு இல்ல, போலீஸுக்கும் பாதுகாப்பு இல்லை சினிமாவில ஹீரோ.., முதல்-அமைச்சராக ஜீரோ இதுவரை 20 பேருக்கு மேலான த.வெ.க நிர்வாகிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

த.வெ.க ஆட்சி

த.வெ.க ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், சின்னக் குழந்தைகள் எல்லாம் காணாமல் போகிறது, இரண்டரை வயது குழந்தைக்குக்கூட வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது இப்படி அதிகரித்து இருக்கிறது என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பல நேரங்களில் நாங்கள் ஊடகங்களை சந்தித்து சொல்லி வந்திருப்போம்.

பாதுகாப்பு இல்லை

அதை நிரூபிக்கிற வகையில்தான் தேனி மாவட்டத்தில் சிறைச்சாலையில் இருந்து 17 பேர் வந்து தப்பி ஓடி இருக்காங்க. அவங்க சும்மா தப்பி ஓடல, காவலரை வந்து தாக்கிட்டு போயிருக்காங்க. இந்த ஆட்சியில் வந்து மக்களுக்கும் பாதுகாப்பு இல்ல, போலீஸுக்கும் பாதுகாப்பு இல்லை.

தப்பிச்சு போனார்

த.வெ.க ஆட்சி வந்த பிறகு ஜூன் மாதம் 21ஆம் தேதி, அன்னைக்கு செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில அஞ்சு பேர் காணாம போனாங்க. ஜூலை 1ஆம் தேதி பழனிசெட்டிப்பட்டி, தேனியில வந்து ஒருத்தர் காணாம போனார், காவல் நிலையத்தில இருந்து ரிமாண்ட் அக்யூஸ்ட். ஜூலை 2ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து ஒருத்தர் காணாம போனார், தப்பிச்சு போனார்.

ஜூலை 12ஆம் தேதி மறுபடியும் செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்திலிருந்து 12 பேர் தப்பித்து போயிருக்காங்க. ஜூலை 13, 14 அதே செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில 11 பேர் போயிருக்காங்க. அக்டோபர் 10ஆம் தேதி ஆசாரிப்பள்ளம், கன்னியாகுமரி மாவட்டத்தில ஒருத்தர் தப்பிச்சு போயிருக்கார்.

முதல்-அமைச்சர் ஆய்வு

அக்டோபர் 20 புழல் சிறையில ஒருத்தர். இன்னைக்கு நம்ம மாற்றம் ப்ரோ முதல்-அமைச்சர் போய் ஆய்வு பண்ணார்ல, ஆய்வு பண்ண அடுத்த மாசமே ரெண்டு பேர், அக்டோபர் 20, அக்டோபர் 21 ரெண்டு பேர் மத்திய சிறையில இருந்து தப்பிச்சு போயிருக்காங்க. அதுக்கெல்லாம் உச்சபட்சமாக நேத்தைக்கு அக்டோபர் 26ஆம் தேதி அன்னைக்கு 17 பேர் தப்பித்திருக்காங்க.

என்ன நிர்வாகம் செய்கிறார் முதல்-அமைச்சர்?

இதுவரைக்கும் த.வெ.க ஆட்சியில 50 பேர் சிறைக்காவலில் இருந்து தப்பித்திருக்கிறாங்கன்னா என்ன நிர்வாகம் செய்கிறார் தமிழ்நாட்டுடைய முதல்-அமைச்சர்? இது போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டில இதுவரைக்கும் நடந்ததே கிடையாது.

ஜெயலலிதா ஆட்சி

30 வருஷத்துக்கு முன்னாடி ஜெயலலிதாவுடைய ஆட்சியில 1995ல ரெண்டு கட்டமா 55 குற்றவாளிகள், எல்டிடி அமைப்பினர் தப்பிச்சு போனாங்க. அந்த ஒரு சம்பவம்தான் பெரிய சம்பவம் தமிழ்நாட்டுல. அதுக்கப்புறம் தமிழ்நாட்டினுடைய சிறையில் இருக்கக்கூடிய எந்த சிறை கைதி இந்த அளவுக்கு பெரிய அளவுல வந்து, சிறைக் காவலர்களை தாக்கிட்டு வெளிய போனதுன்றது வந்து இதுதான் முதல் முறை.

சட்டம் ஒழுங்கு

தமிழ்நாட்டினுடைய சட்டம் ஒழுங்கு காப்பாத்துற லட்சணம் இதுதானா சார்? சிஎம் சார், நீங்க வந்து ஆய்வு பண்ணீங்க சிறைச்சாலைக்கு போய். ஆனா சமூக வலைதளங்கள் என்ன சொன்னாங்கன்னா, உங்க ஜோசியர் உங்களுக்கு பரிகாரமா சிறைவாசல்ல போய் கால வச்சிட்டு வாங்கன்னு சொன்னாங்க.

பரிகாரம்

இப்ப எங்களுக்கு வர சந்தேகம் என்னன்னா, தமிழ்நாட்டு மக்களுக்கு வர சந்தேகம் என்னன்னா, முதல்-அமைச்சரா சிறைக்கு போய் ஆய்வு செஞ்சீங்களா? இல்ல ஜோசியருடைய பரிகாரத்தை செய்வதற்காக சிறைச்சாலைக்குள்ள போய் வந்தீங்களா?

நிர்மல் குமார்

நீங்க ஆய்வு செஞ்சா ஏன் ஆய்வு செஞ்ச உடனே வந்து புழல் சிறையிலே ரெண்டு பேர் காணாம போனாங்க? இன்னைக்கு 50 பேர் வரைக்கும் வந்து நிக்குது. இந்த துறைக்கு வந்து அமைச்சரா இருக்கக்கூடிய நிர்மல் குமார் வாய்க்கிழியே வக்கனையா பேசுறதுதான் லாக்கியா இருக்கார்.

மைக் போட்டு பேட்டி

அமைச்சர், சிறைத்துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பொழுது விடியக்கூடாது. விடிஞ்சா போதும் எங்கயாவது ஒரு முச்சந்தில போய் ஒரு டேபிள் போட்டு உட்காந்துகிட்டு ஒரு மைக் போட்டு பேட்டி கொடுக்கறதுதான். திமுக வைப் பற்றி பேசுறதுதான்.

சார், நீங்க பேட்டி கொடுக்கற நேரத்தில போய் பைல பார்த்தா கூட சார், ஆய்வு பண்ணா கூட சார், சட்டம் ஒழுங்கை காப்பாத்தலாம் சார். இந்த கேபினெட்ல வந்து ஒரு மந்திரிகூட உருப்படியா வேலை செய்ற மாதிரி தெரியல.

அரசியல் விமர்சனம்

ஒரு ரெண்டு மூணு தினங்களுக்கு முன்னாடி எங்களுடைய கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, அவங்க வந்து ஒரு ட்வீட் பண்ணிருந்தாங்க. முதல்-அமைச்சருக்கு ஸ்கில் டு இல்ல, அதை தெரிஞ்சுக்கணும்ன்ற ஒரு ஆர்வமும் இல்லை. இதைத்தான் வெளிப்படுத்தி காட்டுது. நாங்க ஏதோ அரசியல் விமர்சனம் செய்றதுக்காக இது அல்ல. நாங்க சொல்ற ஒவ்வொரு வார்த்தைகளும், கருத்துக்களும் ஒவ்வொரு நாளும் முதலமைச்சர் வந்து ப்ரூப் பண்ணிட்டுத்தான் இருக்கார்.

திக் திக் மூமெண்ட்டா யாரு?

இப்ப வந்து தமிழ்நாட்டுக்கு வந்து திமுகவுக்கு வந்து திக் திக் மூமெண்ட்டா யாரு? டிவிகேனுடைய விர்ச்சுவல் வாரியர்ஸ், டிவிகேனுடைய ஐடி விங் என்ன போட்டது? தமிழ்நாட்டுக்குடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிர்வாகிகளுக்கு திக் திக் மூமெண்ட் அப்படின்னு சொல்லி போட்டாங்க. நேத்து கூட எங்களுடைய துணைப் பொதுச் செயலாளர் பதில் சொல்லும்போது சொன்னாங்க, திக் திக் மூமெண்ட் திமுகவுக்கு இல்ல, திக் திக் மூமெண்ட் தமிழ்நாட்டுக்குத்தான். திக்கு திக்கு திக்குன்னு இருக்கு.

மக்கள் பீதியில் இருக்காங்க

தமிழ்நாட்டுல இன்னைக்கு வந்து ஜெயில்ல இருக்கறவங்க எல்லாம் வெளியில வந்துட்டாங்க. காவலர்களுக்கு பாதுகாப்பு இல்ல. மக்கள் எல்லாம் பீதியில் இருக்காங்க. இதுக்கெல்லாம் என்ன சொல்லப் போறாரு தமிழ்நாட்டுடைய முதல்-அமைச்சர்? கத்தி படத்தில மேப் போட்டு பிடிச்சார் நம்ம முதல்-அமைச்சர். இப்ப எங்க போனார் இவரு? இப்ப இவர் மேப் எங்க? இவர் எங்க போய் வந்து கைதிகள எப்படி பிடிக்க போறாரு?

முதல்-அமைச்சராக ஜீரோ

சினிமாவைப் பார்த்து மோகத்தில ஓட்டு போட்ட மக்களுக்கு எல்லாம் இது மிகப்பெரிய பரிசா கொடுத்திருக்கிறார் முதல்-அமைச்சர். சினிமாவில ஹீரோ சார், நீங்க மறுபடியும் மறுபடியும் சொல்றேன், சினிமாவில ஹீரோ சார், நீங்க. நடைமுறையில தமிழ்நாட்டில சிஎம் ஆக நீங்க ஜீரோவாதான் இருக்கீங்க.

நான் என்ன கேக்கறேன்னா, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முதல்-அமைச்சர் ஏன் மௌனமா இருக்கிறார்? வெறும் ரீல்ஸ் போடுறதுதான் அவருடைய நோக்கமா இருக்குதுன்னா எதுக்கு நீங்க ஆட்சிக்கு வந்தீங்க?

நிர்மல் குமார் பேச மாட்டேன்றாரு?

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அமைச்சர்கள் யாராவது சட்டமன்றத்தில ஒழுங்கா பதில் சொன்னாங்களா? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்காங்களா? ஒரு மாற்றத்தை மக்கள் விரும்பி கொடுத்திருக்காங்க, இல்லைன்னு சொல்லல. ஆனா கொஞ்சமாவது அஞ்சு மாசம் முடிஞ்சிருக்கு. யாராவது கத்துக்கிட்டு இருக்காங்களா? எந்த அமைச்சராவது துறையை பத்தி தெரிஞ்சிருக்கறாங்களா? சிறைத்துறையில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்திருக்கு. நிர்மல் குமார் எங்க கொண்டு போய் முகத்தை வச்சுக்க போறாரு? ஏன் இன்னைக்கு வந்து அதை பத்தி அவர் பேச மாட்டேன்றாரு?

மறைவாதான் இருக்கார்

இதையெல்லாம் பல கேள்விகள் வந்து தமிழ்நாட்டு மக்கள் இன்னைக்கு வந்து முதலமைச்சரைப் பார்த்து கேக்கறதுக்கோ, நீங்க போய் அவர்கிட்ட மைக் போட்டு கேக்குறதுக்கோ வாய்ப்பில்லை. ஏன்னா முதல்-அமைச்சர் வந்து மறைவாதான் இருக்கார். அவருக்கு தேவைன்னா ஒரு ஷூட்டிங்கு வெளியில வருவார். தேவைன்னா திமுகாவை திட்டறதுக்கு வந்து பேசுவார்.

விளக்கம் என்ன?

இன்னைக்கு நான் வந்து தமிழ்நாட்டினுடைய அரசாங்கத்தை பார்த்து கேட்கிறேன். தமிழ்நாட்டினுடைய முதல்-அமைச்சரை பார்த்து நான் கேட்கிறேன். 50 கைதிகள் இன்றைக்கு வந்து தப்பித்திருக்கிறாங்க. காவலர்கள் தாக்கப்பட்டிருக்கிறாங்க. இதுக்கு தமிழக அரசினுடைய விளக்கம் என்ன? முதல்-அமைச்சர் என்ன நிலைப்பாடு எடுக்க போறார்?

நீங்க ஓடுனீங்களா?

தினந்தோறும் நிர்மல் குமாரை கூப்பிட்டு வந்து பேட்டி கொடுத்து திமுகவை திட்ட சொல்ல தெரியுதுல்ல? ஏன் ஒழுங்கா போய் வேலைய பார்க்க மாட்டியான்னு கேட்க தெரியாதா முதல்-அமைச்சருக்கு? திமுக தலைவர் அரசியலை விட்டே ஒதுங்கணும்னு சொல்லக்கூடிய அரசியல் அரைவேக்காட்டுத்தனமா பேசக்கூடிய அமைச்சர், நீங்க எப்படி இருக்கீங்களோ அப்படித்தான் தமிழ்நாட்டினுடைய கைதிகள் இருக்காங்க. நீங்க ஓடுனீங்களா? 41 பேரை கொன்று குவித்து அந்த சம்பவத்துக்கு காரணமா இருந்த நீங்க ஓடு ஓடு ஓடுன்னு ஓடுனீங்கள. இப்ப சிறைச்சாலையில ஒவ்வொருத்தரும் ஓடிட்டு இருக்காங்க. நீங்க என்ன பார்முலாவை உருவாக்கி கொடுத்தீங்களோ அதைத்தான் செய்றீங்க.

ஏன் ஏமாத்துறீங்க?

அதனால சினிமாட்டி முதல்-அமைச்சரா இருக்காதீங்க. இருக்காதீங்கன்னு பல முறை நாங்க சொல்லிட்டு இருக்கோம். சிடி நிர்மல் குமார், ஒன்னு அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சரா பணியாற்ற தெரிஞ்சா வேலை செய்யுங்க. இல்லன்னா விட்டுட்டு போங்க. எதுக்கு இந்த பதவி உங்களுக்கு? மக்களுடைய வரிப்பணத்தில அதிகாரத்தில உட்கார்ந்துகிட்டு ஏன் ஏமாத்துறீங்க?

பாலியல் வன்கொடுமை

முதல்-அமைச்சருக்கு கொஞ்சமாவது வந்து அக்கறை இருக்கா? அரசாங்கத்தை நடத்தணும்ன்ற எண்ணம் இருக்கா? மக்களுடைய பாதுகாப்பு பத்தி அவருக்கு கவலை இருக்கா? பெண்களுடைய பாதுகாப்பு பத்தி அவருக்கு கவலை இருக்கா? குழந்தைகளுடைய நலன் மீது அக்கறை இருக்கா? ரொம்ப இந்த குழந்தைகளால ஓட்டு வாங்கி கொடுத்தாங்கன்னு வாய்க்கிழியே பேசுனீங்க முதல்-அமைச்சர். குழந்தைகள் தினம் தினம் செத்துக்கிட்டு இருக்கு சார். தங்கச்சி, சகோதரர், தாய்மாமன் எல்லாம் சொன்னீங்களே சார். பெண்கள் இன்னைக்கு தினந்தோறும் வந்து பாலியல் குற்றம், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறாங்க சார். அதுலயும் கிட்டத்தட்ட 20 பேரு உங்க த.வெ.க நிர்வாகிகள் தான்.

த.வெ.க நிர்வாகிகள்

இந்த த.வெ.க ஆட்சிக்கு வந்த பிறகு வந்தக்கூடிய குற்றப் பின்னணிகள் எடுத்தீங்கன்னா 20 பேருக்கு மேல பாலியல் குற்றங்கள்ல ஈடுபட்டது த.வெ.க நிர்வாகிகள் தான். கொஞ்சம் தயவு செய்து நீங்க வந்து ஆட்சி செய்யுங்க. மக்களுக்கு பணியாற்றுங்க. எங்களுக்கே வந்து ரொம்ப வேதனையா இருக்கு. தினந்தோறும் காலங்காத்தால பிரஸ் பார்த்து உங்களை வந்து இந்த மாதிரி வந்து திட்டறது, உங்களை கேக்கறதுங்கறது எங்களுக்கு வருத்தமா இருக்கு.

மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டுருக்காங்க. தயவு செய்து வேலை பாருங்க. அதையெல்லாம் விட்டுட்டு நீங்க வந்து மக்களுக்கு எந்த வேலையும் நான் செய்ய மாட்டேன், யார் கேள்விக்கும் நான் பதில் சொல்ல மாட்டேன், பிரஸ் பார்க்க மாட்டேன்னா என்ன அர்த்தம் அது? அஞ்சு மாசம் ஆச்சு நீங்க ஆட்சிக்கு வந்து. இதுவரைக்கும் நீங்க பிரஸ் பார்க்கல. சும்மா வந்து இருக்கிற மந்திரிகளை நாலு பேரை வந்து டெய்லியும் காலையில அனுப்பி விடு. ஏதாவது ஒரு ரோட்டுக்கு அனுப்பிவிட்டு, நீ ஒரு மூலையில நின்னு, சந்துல நின்னு ஒரு பேட்டி கொடு. நீ ஒரு சந்துல நின்னு பேட்டி கொடுன்னு.

திமுகவை வசைப்பாடுறத விட்டுட்டு தயவு செய்து ஆட்சிக்கு வாங்க. ஆட்சி செய்யுங்க. இன்னும் நீங்க வந்து ஆட்சியில வந்த மனநிலையில இல்லை. அதனால்தான் நான் சொன்னேன், சிறையிலேயே பாதுகாப்பு இல்லைன்னா மக்களுக்கு நாட்டில வந்து எங்க பாதுகாப்பு இருக்கும்? இனிமேல் நிர்மல் குமார் வாய்க்கிழியே வெளிய வந்து பிரஸ் பார்க்கறத எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா போய் வந்து மக்கள் பணி ஆற்றுங்குதான் நான் கேட்டுக்கிறேன்.

கேட்கிற மனநிலையில இல்ல

இந்த 17 பேர் தப்பித்ததற்கான உண்மையான காரணத்தை தமிழக அரசு விளக்கணும். இன்னும் சொல்லப்போனா, எனக்கு கிடைச்ச, எங்களுக்கு கிடைத்திருக்கிற தகவல்னா அதிகாரிகள் பேச்சே அவங்க கேட்கறது இல்லை. காவல்துறை உயரதிகாரி ஏதாவது ஒரு கருத்து சொன்னா இந்த அமைச்சர்கள் கேட்கிற மனநிலையில இல்ல. இவங்க சொல்றதுதான் எக்ஸிகியூட் பண்ணனும். இவங்க சொல்றதுதான் செய்யணும்.

மோசமான ஆட்சி

ஒரு ஆட்சி நிர்வாக அமைப்புனா அதிகாரிகள் சொல்றத கேட்கணும். அதிகாரிகள் சொல்ற ஆலோசனை கேட்கணும். ஆனா எனக்கு கிடைச்ச தகவல்னா வந்து பல உயர் அதிகாரிகள் ஐஏஎஸ் ஆகட்டும், ஐபிஎஸ் ஆகட்டும், வெறுத்து போயிருக்காங்க. எல்லாரும் வந்து என்னடா இந்த கவர்மெண்ட்ல போய் நம்ம வேலை செய்யறோமேன்ற ஒரு ஒரு பேட் பீலிங்ல இருக்கறாங்க. இது ஒரு பேட் கவர்மெண்ட். இந்த அளவுக்கு ஒரு மோசமான ஆட்சி, ஒரு ஆறு மாசத்துக்குள்ள ஒரு புதிதாக மாற்றத்தை கொடுக்கிறோம்னு வந்த ஆட்சி இவ்வளவு பெரிய மோசமான ஒரு கெட்ட பேரை சம்பாதிச்சது தமிழ்நாட்டு அரசியல்ல, இந்திய அரசியல் எங்கேயுமே கிடையாது.

இது நாடா இல்ல காடா சார்?

இது நாடா காடான்னு கேட்டீங்களே சார் சிஎம் சார். நாங்க இப்ப கேக்குறோம் சார். இது நாடா இல்ல காடா சார்? தமிழ்நாட்டுல தான் நாங்கல்லாம் இருக்கறோமா? அமைதியான அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டை இப்படி சிதைச்சிட்டீங்களே சார். மக்களை ஏமாத்திட்டீங்களே சார். வஞ்சிட்டீங்க, வஞ்சித்துருக்கீங்க மிஸ்டர் சிஎம். இதுக்கு மேலயும் நீங்க அமைதியா இருந்தீங்கன்னா, இந்த மக்கள் உங்களை மன்னிக்க மாட்டாங்க முதல்-அமைச்சர்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT