தமிழக செய்திகள்

அதிமுகவை தேர்வு செய்ததற்கு காரணம் இது தான்.. - காளியம்மாள் பேட்டி

எனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என காளியம்மாள் கூறினார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியிருந்த காளியம்மாள், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் இணைந்ததற்கான காரணம் குறித்து பேசியதாவது;

”ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறேன். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அ.தி.மு.க.வில் இணைந்தேன். அ.தி.மு.கவில் இணைந்தது ஒருங்கிணைந்து எடுத்த முடிவு. எனது தனிப்பட்ட முடிவு அல்ல.

இன்றைய சூழலில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். விலைவாசி உயர்வு, சட்டம், ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு போன்ற நிறைய பிரச்சினைகள் உள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

அரசியல் கட்சியிலிருந்து விலகினாலும் மக்கள் அரசியலிலிருந்து விலகவில்லை. நாம் தமிழர் கட்சியில் செயல்படுவதற்கு முன்பு அ.தி.மு.க.வில் ஏற்கனவே செயல்பட்டுள்ளேன். எனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.” என்றார்.

SCROLL FOR NEXT