சென்னை,
பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதல்-அமைச்சர் விஜய் தனது கட்சி எம்.எல்.ஏ.-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.
முதல்-அமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் 'Strict officer' செய்தது என்ன?
இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதல்-அமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.