தமிழக செய்திகள்

இந்த ராமதாஸ் தோற்கலாம்..ராமதாஸ் உருக்கம்

அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக கூறியுள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தர்மபுரியில் சௌமியா வெற்றி பெற்றால், அந்த தர்மபுரி விரைவில் ‘அதர்மபுரி' என்று பெயர் எடுக்கும்”

இந்த ராமதாஸ் தோற்கலாம். ஆனால், துரோகம் ஒருபோதும் ஜெயிக்கக் கூடாது. என் ரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டர்கள் எனக்கு மருந்தாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

அரசியலில் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், ஸ்டாலின் தன் தந்தை கலைஞர் சாகும் வரை கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். ஆனால், எனக்கு வாய்த்த பிள்ளையோ, நான் உயிரோடு இருக்கும்போதே என்னைச் செத்துப்போனதாக நினைத்து அரசியல் செய்கிறார். இதைவிட ஒரு தகப்பனுக்குப் பெரிய அவமானம் என்ன இருக்க முடியும்?”

அன்புமணியின் துரோகக் கும்பலுக்கு ஓட்டுப் போடுவது, உங்கள் தந்தை தலையில் நீங்களே மண்ணள்ளிப் போடுவதற்குச் சமம் என அதில் பதிவிட்டுள்ளார்.