தமிழக செய்திகள்

தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடியை சேர்ந்த 2 வாலிபர்கள் வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த டிக்சன்(எ) சுல்தான் (வயது 23) மற்றும் இருதயஜாஸ்பர்(28) ஆகிய 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் உத்தரவின் பேரில் மேற்சொன்ன 2 பேரையும் நேற்று வடபாகம் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT