தமிழக செய்திகள்

தூத்துக்குடி: போலீசாரை அரிவாளைக் காட்டி மிரட்டல்- 2 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பகுதியில் 2 பேர் அரிவாள்களுடன் சுற்றித் திரிவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் ஆறுமுகனேரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி, பிடிக்க வந்த போலீசாரையே அரிவாளால் மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரை அரிவாளைக் காட்டி மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி சீனந்தோப்பு சாலையில் 2 பேர் அரிவாள்களுடன் சுற்றித் திரிவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் ஆறுமுகனேரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்றனர். அப்போது அங்கே நின்றிருந்த 2 வாலிபர்களும் சேர்ந்து போலீசாரையே அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, போலீசார் சாதுரியமாகச் செயல்பட்டு அந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் ஆறுமுகனேரி ராஜாமணியபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஐகோர்ட் மகாராஜா (வயது 30) மற்றும் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஆனந்தராஜ்(20) என்பது தெரியவந்தது.

2 வாலிபர்கள் கைது, 2 அரிவாள்கள் பறிமுதல்

மேற்சொன்ன 2 பேரிடமிருந்தும் 2 அரிவாள்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்செந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின்பேரில் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT