தமிழக செய்திகள்

தூத்துக்குடி: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே குளக்கட்டான்குறிச்சி சுடுகாடு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளக்கட்டான்குறிச்சி சுடுகாடு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், புதூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் துரைச்சாமி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த குளக்கட்டான்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 48), முனியசாமி(57), கணேசன்(46), லட்சுமணன்(47) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.