தமிழக செய்திகள்

தூத்துக்குடி: சிறுவன் கொலை வழக்கில் 4 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 17 வயது சிறுவனை, அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வைத்து 17 வயது சிறுவனை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான முனியசாமி (வயது 19), குமார்(24), சிவப்பிரசாத்(எ) ஸ்கூட்டிசிவா(19) மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த நெல்லை நாயகம்(21) ஆகிய 4 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பரிந்துரையின்படி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் மேற்சொன்ன 4 பேரையும் நேற்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.