தமிழக செய்திகள்

தூத்துக்குடி: வாலிபர் கொலை வழக்கு குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி பகுதியில் ஒரு வாலிபரை முன்விரோதம் காரணமாக 5 பேர் சேர்ந்து கொலை செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து ADJ- II நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு ஆழ்வார்திருநகரி நவலெட்சுமிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 33) என்ற வாலிபரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களான, அதே பகுதியைச் சேர்ந்த மரியசிலுவை என்பரவது மகன்களான அருள்ராஜ்(31), ஞானசேகர்(29) மற்றும் சந்தியப்பன் மகன் அந்தோணிராஜ்(30), குணசிங்(26), அந்தோணிமுத்து மகன் சந்தியப்பன்(50) ஆகிய 5 பேரையும் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

5 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி ADJ- II நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மேற்சொன்ன நீதிமன்றத்தின் நீதிபதி ப்ரீத்தா மேற்சொன்ன நபர்களான அருள்ராஜ், அந்தோணிராஜ், ஞானசேகர், குணசிங் மற்றும் சந்தியப்பன் ஆகிய 5 பேரையும் குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.