தமிழக செய்திகள்

தூத்துக்குடி: பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 5 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உத்தரவுப்படி போலீசார் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உத்தரவுப்படி அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் காவல்துறையினர் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தூத்துக்குடி வடபாகம், தாளமுத்துநகர், ஆத்தூர், கோவில்பட்டி மேற்கு மற்றும் சாயர்புரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் தகராறு செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களான ஜெபராஜ் (வயது 29), அருள்ராஜ்(22), தங்கராஜ்(25), சங்கரேஸ்வரன்(எ) சங்கரலிங்கம்(45), சரவணகுமார்(25) ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது‌.