தமிழக செய்திகள்

தூத்துக்குடி: வாய்க்காலில் வாலிபர் சடலம் மீட்பு- போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த வாலிபர், டாஸ்மாக் அருகில் உள்ள வாய்காலில் நீரில் மிதந்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் டாஸ்மாக் அருகில் உள்ள வாய்காலில் கிடந்த வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாய்க்காலில் வாலிபர் சடலம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த உச்சிமாகாளி மகன் கோமு (வயது 38). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அவர் டாஸ்மாக் அருகில் உள்ள வாய்காலில் நீரில் மிதந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த தவலின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது நெற்றியில் ரத்த காயம், இரண்டு கால் முட்டுகளில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT